உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோயில் கோட்டைக்குளத்தில் தெப்பத்திருவிழா

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோயில் கோட்டைக்குளத்தில் தெப்பத்திருவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோயில் வைகாசி விசாகத்தை யொட்டி கோட்டைக்குளத்தில் தெப்ப திருவிழா நடந்தது.

திண்டுக்கல் காளஹஸ்தீஸ்சுவரர், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மன் திருக்கோயில் வைகாசி விசாக திருவிழாவான நேற்று மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டைக் குளத்தில் வசந்த தெப்பத்திருவிழா நடந்தது.

இதையொட்டி மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் வீற்றிருக்க தெப்பத்தின் இருபுறமும் பக்தர்கள் நின்று கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அபிராமி அம்மன், பத்மகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !