உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி தேரோட்டம்.

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி தேரோட்டம்.

காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி சிம்ம, ஹனுமந்த, யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். கடந்த 28ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 3 தெப்பமும், ஜூன் 4 புஷ்ப பல்லாக்கும், விடையாற்றியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகம்மை, செயல் அலுவலர் அஜின் செய்து வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !