சாலையூர் பழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி திருவிளக்கு பூஜை
ADDED :5 days ago
அன்னூர்; சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாக விழா நடந்தது. சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நேற்று மாலை, கணபதி ஹோமம் நடந்தது. பழனி ஆண்டவருக்கு, பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சித்தர்கள் அருளுரை வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.