உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சங்கர மடத்தில் பெரியவர் ஜெயந்தி மகோற்சவம்

விழுப்புரம் சங்கர மடத்தில் பெரியவர் ஜெயந்தி மகோற்சவம்

விழுப்புரம்: விழுப்புரம் வேத சம்ரக் ஷண டிரஸ்ட் சார்பில் 133ம் ஆண்டு மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம் நடந்தது.

விழுப்புரம் சங்கர மடத்தில் நடந்த நிகழ்ச்சியில், கடந்த 25ம் தேதி காலை 7:00 மணிக்கு வல்லப கணபதி ேஹாமம், 8:30 மணிக்கு கிருஷ்ண யஜூர்வேத க்ரம பாராயணம், ரிக், சாம வேத பாராயணங்கள் நடந்தது. 26ம் தேதி காலை 7:30 மணிக்கு மேதா சுக்த ேஹாமங்கள், 27ம் தேதி காலை 7:00 மணிக்கு சுயம்வரா பார்வதி ேஹாமம், 28ம் தேதி காலை 7:30 மணிக்கு திருசிம்ஹ மந்த்ர சம்புடித சுதர்சன ஹோமம், 29ம் தேதி காலை 7:30 மணிக்கு தன்வந்திரி ேஹாமம், 30ம் தேதி காலை 7:30 மணிக்கு ஸ்வஸ்த்யன இஷ்டி யாகம் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை மற்றும் மகா ருத்ர ஏகாதசினி ேஹாமம், விசேஷ அபிேஷகமும் மதியம் 12:00 மணிக்கு ரிக், யஜூர், சாம வேத பாராயணம் பூர்த்தி நடந்தது. இரவு 7:00 மணிக்கு மாட வீதிகளில் மகா பெரியவர் படம் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !