நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை
ADDED :135 days ago
நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.