உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.

விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி மாலை பகவத் அனுக்ஞை, அங்குரார்ப்பணம், கருட பிரதிஷ்டை நடந்தது. 23ம் தேதி இரவு அம்சவாகனம், 24ம் தேதி காலை சிம்ம வாகனம், 25ம் தேதி ஹனுமந்த வாகனம், 26ம் தேதி சேஷ வாகனம், 27ம் தேதி கருட வாகன மகோத்ஸவம், 28ம் யானை வாகனம் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. 29ம் தேதி மாலை திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து, இன்று காலை 6:45 மணிக்குமேல் தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நாளை 1ம் தேதி காலை திருமஞ்சனம், இரவு சந்திர பிரபை, 2ம் தேதி மாலை புஷ்ப யாகம், விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !