உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  நீராழி மண்டபத்தை சுற்றி வந்து அருள்பாலித்த நம்பெருமாள்

 நீராழி மண்டபத்தை சுற்றி வந்து அருள்பாலித்த நம்பெருமாள்

திருப்பூர்: தேர்த்திருவிழாவின், 10வது நாளான நேற்று, தெப்பத்திருவிழா நடந்தது; நம்பெருமாள் தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

திருப்பூரிலுள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடந்து வருகிறது. பத்தாம் நாளான நேற்று, தெப்பத்திருவிழா நடைபெற்றது. நேற்று காலை, உற்சவமூர்த்திகள் தேர்வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், காலை அபிேஷக மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.

பெருமாள் கோவிலில், மாலை, 5:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவப்பெருமாள் எழுந்தருளினார். கோவில் வளாகத்தை சுற்றிவந்த உற்சவமூர்த்திகள், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பக்குளத்தின் மையத்தில் உள்ள நீராழி மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நடராஜர் தரிசனம் இன்று காலை, 10:00 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர் – சிவகாமியம்மன் உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் தேர்வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்க உள்ளது. நாளை மஞ்சள் நீராட்டு விழா – மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !