உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி வைகையில் வரதராஜ பெருமாள் அவதார சேவை

பரமக்குடி வைகையில் வரதராஜ பெருமாள் அவதார சேவை

பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வைகை ஆற்றில் அவதார சேவையில் அருள்பாலிக்கும் நிலையில் நாளை இரவு கோயிலுக்கு திரும்புகிறார்.

எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயில் பவுர்ணமி வசந்த விழா நடக்கிறது. மே 31 அதிகாலை 5:30 மணிக்கு வைகையில் இறங்கிய அழகர் நாள் முழுவதும் குதிரை வாகனத்தில் சேவை சாதித்தார். நேற்று முன்தினம் இரவு சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சியளித்தார். பின்னர் இரவு முழுவதும் மகாலட்சுமி நெசவாளர் கூட்டுறவு சங்க மண்டகப்படியில் அவதார சேவையில் வைகை ஆற்றில் வலம் வந்தார். அப்போது மச்ச, கூர்ம, கிருஷ்ண, ராமர் மற்றும் மோகினி அவதாரத்தில் எழுந்தருளினார். நேற்று இரவு கருட வாகனத்திலும் இன்று அனுமார் வாகனத்திலும் எழுந்தருடன் பெருமாள் தினமும் இரவு அவதார காட்சி அளிக்கிறார். நாளை இரவு பூ பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்துடன் கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !