தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :2 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
அதனையொட்டி நேற்று மாலை விநாயகருக்கு திரவிய பொடி, மஞ்சள், பால், தயிர், இளநீர், பன்னீர் விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை வேள்வியும், பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்தும் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. பின் சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளியதைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.