புதுச்சேரி தருமராசா பாஞ்சாலியம்மன் கோவிலில் தேரோட்டம்
புதுச்சேரி: வீமக்கவுண்டர்பாளையம் தருமராசா பாஞ்சாலியம்மன் கோவில் தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
திலாஸ்பேட்டை, வீமக்கவுண்டர்பாளையம் தருமராசா பாஞ்சாலியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பார்த்தசாரதி பெருமாள் புன்னை மர வாகனத்திலும், அர்ஜூனர் அன்ன வாகனத்திலும், பாஞ்சாலிம்மன் குதிரை வாகனத்திலும் வீதியுலா நடந்தது. முக் கிய நிகழ்வான நேற்று ( 5ம் தேதி) மாலை பாஞ்சாலியம்மன் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து தீமிதி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீமித்து நேர்த்திக்க டன் செலுத்தினர். ஆறுமுகம் எம்.எல்.ஏ., உள்ப ட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரானை நடந்தது. இன்று (6ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா, நாளை (7ம் தேதி) தருமர் பட்டாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.