நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :2 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது.
நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த மே மாதம் 29ம் தேதி கொடியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் பத்து நாள் உற்சவம் துவங்கியது. தினமும் காலை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடக்கிறது. இன்று மாலை பகாசூரனுக்கு அன்னமிடல், வரும் 12ம் தேதி மாலை தீமிதி விழா, 14ம் தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது .