இறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
ADDED :2 days ago
பெண்ணாடம்: திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த மே, மாதம் 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, காலை அம்மனுக்கு அபிேஷகம், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று மாலை 6:00 மணியளவில் தீமிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீர் உற்சவம், நாளை போத்திராஜா பூஜை, 8ம் தேதி பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.