உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  செதுக்கரை மலையின் மீது உள்ள லிங்கேஷ்வரர் சிலை சேதம்

 செதுக்கரை மலையின் மீது உள்ள லிங்கேஷ்வரர் சிலை சேதம்

குடியாத்தம்: செதுக்கரை மலையின் மீது உள்ள சிவலிங்கம், நந்தி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணியினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செதுக்கரை மலை உச்சியில், ஆகாய லிங்கேஷ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, சிவலிங்கம், நந்திபெருமான் சிலைகளை, மர்ம நபர்கள் சிலர், உளி உள்ளிட்ட ஆயுதங்களால் சேதப்படுத்தியுள்ளனர். 

இதுகுறித்து, ஹிந்து முன்னணி வேலுார் மாவட்ட செயலர் யுவசங்கர், சுவாமி சிலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி, குடியாத்தம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !