உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தாயார் குளம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சி நால்வர் நற்பணி குழுவினர் மாதந்தோறும் ஒரு ஞாயிற்றுகிழமையன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், பராமரிப்பு இல்லாத சிவன் கோவில்களில் துாய்மை பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 22வது துாய்மை பணியாக காஞ்சிபுரம் தாயார் குளம் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று துாய்மை பணி மேற்கொண்டனர்.

இதில், கோவில் குளத்தில் வளர்ந்திருந்த தேவையற்ற செடிகளை அகற்றினர். கோவில் கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளையும், பிற விக்ரஹங்களையும் சுத்தப்படுத்தினர். கோவிலில் உள்ள பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !