விருத்தாசலம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்; ஏராளமானோர் தரிசனம்
விருத்தாசலம்: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று (7ம் தேதி) திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி மாலை 6:00 மணியளவில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணியளவில் அர்சுனன் – திரவுபதி அம்மன்னுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 12ம் தேதி முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாாடுகளை சின்னவடவாடி, எ.வடக்குப்பம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.