உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பு

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைப்பு

திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் கூடுதலாக புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்துக்கள் பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடக்கின்றன.

இக்கோவிலில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், முகூர்த்தநாள், கோவில் விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டடு வந்தனர். கோவில் வளாகத்தில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் உள்ளன. ஆனால் அவை சிறிய அளவில் இருப்பதால், பக்தர்களின் குடிநீர் தேவையை போக்குவதில் சிரமம் ஏற்பட்டது. கூடுதல் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையறிந்த பக்தர் ஒருவர் கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலுடன்,கிழக்கு புற நுழைவாயில் வளாகத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவு செய்தார். அதன்படி, 200 லிட்டர் கொள்ளளவு கொண்டகுடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !