உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துடியலூர் மல்லேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா

துடியலூர் மல்லேஸ்வரி கோயில் கும்பாபிஷேக விழா

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள மல்லேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா மங்கல இசையுடன் துவங்கியது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், அடியார்கள் காப்பு அணிதல் நிகழ்ச்சிகள் நடந்தன. திருக்குடங்கள் வேள்விசாலைக்கு வருகை தருதல், விமான கலசத்துக்கு திருக்குட நன்னீராட்டு விழா, மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தன. அன்னதானம், திருமஞ்சனம், அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு, திருநீறு பிரசாதம் வழங்குதல் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !