உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பழமையான அரசமரம் அகற்றம்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பழமையான அரசமரம் அகற்றம்

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் தென்கிழக்கு பகுதியில் இருந்த பழமையான அரசமரத்தை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் வெட்டி அகற்றினர்.


வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் தென்கிழக்கு பகுதியில் பழமையான அரசமரம் இருந்தது. இதில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்ற கோரி வளையல், தொட்டி கட்டி வந்தனர். அரச மரத்திற்கு வழிபாடு செய்தனர். இந்நிலையில் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று அரச மரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. இதனால் வழிபாட்டிற்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஹிந்து அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


அறநிலையத்துறையினர் கூறுகையில்; ‘கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசமரம் உள்ள பகுதியில் ராஜகோபுரம் அமைய உள்ளது. இதனால் மாவட்ட பசுமை குழு அனுமதி பெற்று அரச மர கிளைகளை வெட்டி உள்ளோம். மரத்தை முழுமையாக அகற்றி முல்லைப்பெரியாற்றங்கரையில் நடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !