கடலுார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
கடலுார்: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார், கரையேறவிட்டகுப்பம், பழைய வண்டிப்பாளையம் திரவு பதியம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவம் கடந்த மே 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் முதல் தேதி, பகாசூரனுக்கு சோறுபோடுதல், 2ம் தேதி திரவுபதி, அர்ச்சுனர் திருக்கல்யாணம், 3ம் தேதி பரிவேட்டை மற்றும் திரவுபதியம்மன், அர்ச்சுனர், கிருஷ்ணர் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் கரக உற்சவம், சக்தி கரகம் வீதியுலா நடந்தது. நேற்று காலை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இரவு கோவில்முன்பு நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று 6ம் தேதி காலை 9:00 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், மாலை 6:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.