உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கொங்கு நாச்சியம்மன் கோயில் வைகாசி செவ்வாய் உற்ஸவம்

பிள்ளையார்பட்டி கொங்கு நாச்சியம்மன் கோயில் வைகாசி செவ்வாய் உற்ஸவம்

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலின் உபகோயிலான கொங்குநாச்சியம்மன் கோயிலில் வைகாசி செவ்வாய் உத்ஸவத்தை முன்னிட்டு தேரோட்டம், பால்குடம், மதுக்குட விழா, புரவி எடுப்பு நடந்தது.

இன்று காலை 8:00 மணிக்கு உற்ஸவ கொங்கு நாச்சி அம்மன், கற்பகவிநாயகர் கோயில் திருநாள் மண்டபத்தில் எழுந்தருளி பிச்சைக் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்து தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு ஏஆர்.ராமசாமி செட்டியார், அரிமளம் என்.கண்ணன் செட்டியார் தேர்வடம் பிடித்தனர்.

பின்னர் பக்தர்கள் விநாயகர் சன்னதியிலிருந்து பால்குடம்,மதுக்குடம் எடுத்து கொங்குநாச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது. பின்னர் மாலையில் மருதங்குடி புரவிப்பொட்டலிலிருந்து புரவிகள் எடுத்து கிராமத்தினர் ஊர்வலமாக வடக்கு கண்மாய்கரையில் எழுந்தருளியுள்ள காடப்ப அய்யனார் கோயிலில்புரவிகளை சேர்த்தனர். தொடர்ந்து மூலவர் அய்யனாருக்கு தீபராதனை நடந்தது.  பின்னர் இரவு 7:00 மணிக்கு அம்மன் தேரை பக்தர்கள் வடம் பிடித்து அம்மன் கோயிலுக்கு சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !