காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழா; பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவிலில் வரும் 29ம் தேதி மாங்கனி திருவிழாவை முன்னிட்டு பந்தல் அமைக்கு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பி அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும். இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைலலால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. வரும் ஜூன்.27ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும். 28ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும்,இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், மறுநாள் ஜூன் 29ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும், அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் பைபவம் நடக்கிறது.அன்று மாலை அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் ஜூன் 30ம் தேதி காட்சி கொடுத்தல் திருவீதியுலா நடைபெறுகிறது. மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சாலையில் பந்தல் அமைக்கப்பட்டு இருப்புறம் கடைகள் அமைக்கப்படும் ஒருமாதம் நடைபெறும் மாங்கனித்திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுக்களிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், கோவில் தனி அதிகாரி விநாயகமூர்த்தி ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.