திருவதிகை சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
ADDED :4 hours ago
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். மூலவர் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.