இரும்பாடி முத்தாலம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
ADDED :3 hours ago
சோழவந்தான்; இரும்பாடியில் முத்தாலம்மன் கோயில் வைகாசி திருவிழா நடந்தது. ஜூன் 2 சாமிசாட்டுதல், காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஜூன் 16 ஆபரணப்பெட்டி எடுத்துவருதல், அம்மன் உலா, ஜூன் 17 தீச்சட்டி, பால்குடம், அம்மன் ஊஞ்சல் ஆடுதல், ஜூன் 18 மஞ்சள் நீராட்டுதல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா கமிட்டியினர், கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.