வடலூர் சத்திய ஞான சபையில் கொடிமரம் அகற்றம்
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபை கொடி மரம் அகற்றப்பட்டது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், வள்ளலார் தெய்வ நிலையம் இவற்றை நிர்வகித்து வருகிறது. சத்திய ஞான சபை, தருமச்சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் தனித்தனியாக கொடி மரங்கள் உள்ளன. இங்கு விழா காலங்களில் அகவல் பாராயணம் பாடப்பட்டு, சன்மார்க்க கொடி உயர்த்தும் நிகழ்வுக்கு பின்னரே விழாக்கள் நடைபெறுவது வழக்கம். தருமச்சாலை பகுதியில் இருந்த கொடி மரம் சிதிலமடைந்ததாக முடிவு செய்த வள்ளலார் தெய்வ நிலையம், சில மாதங்களுக்கு முன்பு அங்கிருந்த பழைய கொடி மரத்தை அகற்றி, புதிய கொடி மரத்தை நிலை நிறுத்தினர். அதேபோல சத்திய ஞான சபையின் கிழக்கு பகுதியில் இருந்த கொடிமரம் நேற்று அகற்றப்பட்டது. மூன்று ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு, 38 அரை அடி உயரம் கொண்ட பழைய கொடிமரம் அகற்றும் பணிகள் நடந்தன. பழைய கொடி மரம் சிதிலமடைந்த நிலையில் அகற்றப்பட்டு, இங்கு புதிய கொடிமரம் அமைக்கப்பட உள்ளது என, சன்மார்க்க பின்பற்றாளர்கள் தெரிவித்தனர்.