கொந்திகுளம் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் வருடாபிஷேகம்
ADDED :3 hours ago
அலங்காநல்லுார்: அரியூரில் கொந்திகுளம் அய்யனார் சுவாமி கிடமாட்டு தொழுவகம் கோயில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு முடிவடைந்ததையொட்டி நேற்று வருடாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமக்த்துடன் துவங்கிய யாகத்தில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் குடங்களை வைத்து பூஜை செய்தனர். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி பீடத்திற்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. த.வெ.க., நிர்வாகி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.