பெரியநாயக்கன்பாளையம் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4 hours ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கஸ்தூரிபாளையம் கற்பக விநாயகர், வள்ளி தெய்வானை உடனமர் ஆறுமுக பெருமான், பொம்மையன், வடக்கலூர் அம்மன் திருக்கோயில்கள் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவை ஒட்டி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, திருமகள், நிலத்தேவர் வழிபாடு, திருமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, காப்பணிதல், விமான கலசம் நிறுவுதல், எண் வகை மருந்து சாத்துதல், முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்விகள் நடந்தன. நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, அருள் உரை, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.