உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூரில் 27ம் தேதி பால்குட விழா

திருப்போரூரில் 27ம் தேதி பால்குட விழா

திருப்போரூர்: திருப்போரூரில் தைப்பூசத்தை முன்னிட்டு, 27ம் தேதி பால்குட விழா நடைபெற உள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்தனுக்கு தமிழ் புத்தாண்டு, பொங்கல் மற்றும் தைப்பூச நாளில், பால்குட விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு தைப்பூச பால்குட விழா, வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. கண்ணகப்பட்டு வேம்படி விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள், பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். இன்றையதினம் அரசு விடுமுறை நாள் என்பதால், சிறப்பு காவடி ஊர்வலத்திற்கும், உபயதாரர்கள் ஏற்பாடு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !