எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சுதர்சன ஜெயந்தி
ADDED :1 hours ago
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சுதர்சன ஜெயந்தி விழா நடந்தது.
எமனேஸ்வரத்தில் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்ஸவம் மற்றும் வசந்தோத்ஸவ விழா நடக்கிறது. கோயிலில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நேற்று சுதர்சன ஜெயந்தி விழாவையொட்டி சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஆனி மாதம், சித்திரை நட்சத்திரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதார திருநாளாகும். பெருமாளின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக உள்ளார். சக்கரத்தாழ்வாரை வணங்கும் போது 16 வகையான பேரருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன்படி ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.