உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிளியூர் நந்தகோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

கிளியூர் நந்தகோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம்

நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் கிளியூர் கிராமத்தில் ருக்மணி சத்தியபாமா நந்தகோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 23 காலை மகா சுதர்சன, கணபதி ஹோமங்கள் மற்றும் தன பூஜை நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, கும்ப பிரதிஷ்டை மற்றும் முதல் கால ஜெப ஹோமங்கள், பூர்ணாகுதி நிறைவடைந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு கோ பூஜை, 2ம் கால யாக ஹோமங்கள் மகாபூர்ணாகுதி நடந்தது. பின்னர் கண்டனூர் மாலோல ஸ்ரீனிவாச பட்டாச்சார் மற்றும் வேங்கிடவரதன் பட்டாச்சார் உள்ளிட்டோர் புனித தீர்த்த குடங்களை சுமந்து சென்றனர். தொடர்ந்து ஒன்பது முப்பது மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கிளியூர் பொதுமக்கள் உட்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !