உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணியில் ஜேஷ்டாபிஷேகம்; ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்!

திருப்புல்லாணியில் ஜேஷ்டாபிஷேகம்; ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நடக்கும்!

திருப்புல்லாணி: தமிழ் மாதமான ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை (ஜேஷ்டா) நட்சத்திரத்தன்று உற்ஸவமூர்த்திகளுக்கு நடத்தப்படும் வருடாந்திர அபிஷேகமே ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படும். இது பெரிய திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது.


புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்படும் நீர், பால், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. உற்ஸவ மூர்த்திகளின் மீது ஆண்டு முழுவதும் அணிவிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு கவசங்கள் களையப்பட்டு, ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. கவசங்கள் சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படும். இதனை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சன்னதி அருகே புஷ்ப யாகம் என அழைக்கப்படும் பூக்களால் ஹோம வேள்விகள் நடந்தது. பூஜைகளை கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !