சீசெல்ஸில் தமிழர்கள் கட்டிய விநாயகர் கோவில்; பிரதமர் மோடி தரிசனம்
ADDED :100 days ago
விக்டோரியா : சீசெல்ஸ் நாட்டில் தமிழர்கள் கட்டிய நவசக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.
3 நாள் பயணமாக சீசெல்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் 50வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு, விக்டோரியா நகரில் தமிழர்கள் கட்டிய நவசக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு, கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து சுவாமிகளையும் பிரதமர் மோடி வணங்கி வழிபட்டார். பின்னர், கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவழியினரை சந்தித்தார்.