உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மம் செய்ய சொல்கிறார் திருவள்ளுவர்

தர்மம் செய்ய சொல்கிறார் திருவள்ளுவர்

* தர்மம் செய்தால் பணமும் சேரும். சிறப்பும் வரும்.
* அறிவு என்னும் அங்குசத்தால் புலன்களை அடக்குபவரே மோட்சம் அடைவர்.  
* வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தர்மம் செய்.
* மனத்துாய்மையுடன் இரு. இதுவே சிறந்த அறம்.
* உயிர்களிடம் இரக்கம் காட்டுபவரே உயர்ந்தவர்.  
* உயிரைக் கொல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் இருப்பவரை கண்டால் உயிர்கள் கைகூப்பி வணங்கும்.
* தவம், தானம் செய்பவரை விட உண்மை பேசுபவர் உயர்ந்தவர்.
* நீரால் உடல் சுத்தமாகும். உண்மை பேசுவதால் மனம் சுத்தமாகும்.
* துன்பத்தை பொறுப்பதும், பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பதும் தவம்.
* பொருளின் மீது பேராசைப்படுவதாலேயே உனக்கு பிறப்பு ஏற்படுகிறது.  
* ஆசை இல்லாதவர் கடவுள். அவரது திருவடியை ஆசையாக பிடித்துக் கொள். உன் ஆசை காணாமல் போகும்.  
* பசித்த பின் சாப்பிடு. நோய் என்பதே வராது.
* உனக்கு என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதையே நீ அனுபவிக்கிறாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !