நாமும் பகவானும் ஒன்றா? சொற்பொழிவாளர் விளக்கம்
ADDED :1 days ago
கோவை: ராம்நகர் ராமர் கோயிலில் உள்ள அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் ‘ஸ்ரீமந் நாராயணீயம்’ என்ற தலைப்பில் ஆன்மிக தொடர் செற்பொழிவு நடந்து வருகிறது.
நேற்று சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
பகவானின் அவதாரங்களில் ராம அவதாரமும், கிருஷ்ணா அவதாரமும்தான் புண்ணிய அவதாரங்கள். நாம் பிறந்த இந்த கர்ம பூமியில்தான் பகவானும் பிறந்தார். அப்படி என்றால் நாமும், பகவானும் ஒன்றுதானே என்று கேட்டால் அது தவறு. ராமனும், கிருஷ்ணனும் எடுத்தது பிறப்பு அல்ல; அது அவதாரம். இந்த உலகத்துக்கு சுபிட்சம் அளிக்க அவர்கள் அவதரித்தார்கள். நாம் செய்த கர்ம ஜென்ம புண்ணியத்தால் ஒரு குடும்பத்தில் மனிதர்களாக பிறக்கிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.