நாம் நிம்மதியாக வாழ வழி சொல்கிறார் புத்தர்
* நிம்மதியாக வாழ குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இரு.
* அமைதியை விட உயர்ந்த மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.
* அதிகமாக பேசினால் மட்டும் ஒருவன் அறிஞன் ஆகி விடமாட்டான்.
* நல்ல எண்ணத்துடன் ஒருவன் செயல்பட்டால் அவனை மகிழ்ச்சி பின்தொடரும்.
* புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் அறிவாளி அசைந்து கொடுக்க மாட்டான்.
* புதிதாக கறந்த பசும்பாலை போல பாவச்செயல்கள் உடனேயே புளிப்பாவதில்லை. எதற்கும் ஒரு காலமுண்டு.
* நீ செய்யும் ஒவ்வொரு செயலும், உன்னை நிழல் போல் தொடரும்.
* வெளிப்படையாகப் பேசு. முடியாவிட்டால் அமைதியாக இரு.
* பொற்காசுகள் மழையாகப் பொழிந்தாலும் ஆசைகள் அடங்காமல் பெருகும்.
* பேச்சளவில் தர்மம் எனச் சொல்லி விட்டு அதை செய்யாதவர், வாசனை இல்லாத மலருக்கு சமம்.
* பிறப்புக்கு காரணம் எதுவோ, அதுவே இறப்புக்கும் காரணம்.
* கேட்டதை எல்லாம் எதையும் நம்பாதே.
* ஆசையை வென்றவரை எவராலும் வெல்ல முடியாது.
* உன் விடுதலைக்கு வழி பிறரிடம் இல்லை. உன்னிடமே உள்ளது.