வி.மருதூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
ADDED :4606 days ago
விழுப்புரம்: விழுப்புரம் பவர் ஆபீஸ் ரோட்டிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.விழுப்புரம் வி.மருதூர், பவர் ஆபீஸ் ரோட்டிலுள்ள விநாயகர் நூதன பிம்பமாக முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 25ம் தேதி மகா கணபதி ஹோமம், நவக்ரக ஹோமம், கோ பூஜை ஆகியன நடந்தன.பின்னர் 26ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை, புதுப்பிம்பங்கள் கரிக்கோலம் வருதல், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை, கலசப் புறப்பாடு ஆகியன நடந்தன. காலை 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதில் திருவதிகை வெங்கடேசன், திருக்கடையூர் சந்திரசேகர குருக்கள், விழுப்புரம் மணி குருக்கள், முரளி குருக்கள், ஆலய அர்ச்சகர் குமரன் பூசாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.