மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4607 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4607 days ago
போடி: போடி மயானம் செல்லும் ரோட்டின் ஆற்றோர பகுதியில், மிகவும் பழமையான காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. பவுர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள், சுமங்கலி பூஜைகள் நடக்கிறது.சித்திரை முதல் தேதி, அழகர் ஆற்றில் இறங்கி வரும் போது, போடியில் உள்ள பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து சிவனின் அருளை பெறுகின்றனர். இக்கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறத்தையும் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பாதை வசதி இருந்தும் ரோடு வசதி இல்லாமல் குண்டும், குழியுமாக உள்ளது. மின் கம்பங்கள் இருந்தும் லைட் இல்லை. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, ரோடு வசதி செய்து தர பல முறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு வசதி செய்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4607 days ago
4607 days ago