பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4707 days ago
உச்சிப்புளி: பிரப்பன்வலசை பாம்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமர்சையாக நடந்தது. இதையொட்டி, விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று நான்கு காலயாகசாலை பூஜை முடிந்து, காலை 9.15 மணிக்கு வேதங்கள் முழங்க திருப்பரங்குன்றம் ராஜா குருக்கள் தலைமையில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நிர்வாக அறங்காவலர் பூபதி ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தது. இரவு வான வேடிக்கையுடன் பாம்பன் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து, இசைநிகழ்ச்சிகள் நடந்தது.