நால்வர் கோவிலில் திருவாசக இன்னிசை முற்றோதல் நிகழ்ச்சி
ADDED :9 hours ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் நால்வர் கோவிலில் திருவாசக இன்னிசை முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், இசைக்கலைஞர்கள், இசையமைக்க, பம்மல்ஸ்ரீ காரைக்கால் அம்மையார் பாடசாலை மாணவர்கள் மற்றும் நங்கநல்லுார் தேவார திருப்புகழ் சபை அடியார்களும் இணைந்து, திருவாசக இன்னிசை முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நால்வர் சிலைகளுக்கும் திருமுழுக்கு நடத்தப்பட, மாணிக்கவாசகருக்கு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.