நெல்லிக்குப்பம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :12 hours ago
நெல்லிக்குப்பம்: காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம், நடனபாதேஸ்வரர் கோவிலில், ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இதை முன்னிட்டு, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து காலபைரவருக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன.