உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

சங்கராபுரம் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஜவுளி குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த ஜவுளிகுப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடப்பது  வழக்கம். இந்த ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு பால்,தயிர்,இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச் செய்து,  பக்தர்கள் தேர் வடம் பிடித்து  இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேர் திருவிழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !