குறைவாகப் பேச சொல்கிறார்: ஸ்ரீஅன்னை
* எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ, அவ்வளவு குறைவாகப் பேசு.
* நல்ல மனதுடன் இருந்தால் எல்லாம் உன் வசமாகும்.
* கடவுளை வணங்கு. எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்.
* கடந்த காலத்தை நினைத்து வருந்தாதே. எதிர்காலத்தை எண்ணி பயப்படாதே.
* நமக்குத் தேவையான அனைத்தும் கடவுளிடம் உள்ளன.
* நல்லவர்களின் பேச்சு மனதிற்கு ஆறுதல் தரும்.
* நல்லவர்களின் வாழ்வே நமக்கான படிப்பினை.
* கடவுளின் அருள் எப்போதும் இருக்கிறது. சிலர் அதை உணர்வதில்லை.
* கஷ்டம் வந்தால் அதை வரமாக கருது. காரணம் உன் பாவம் தொலைகிறது.
* கடமையைச் செய். பலனைக் கடவுளிடம் ஒப்படைத்துவிடு.
* எதிலும் ஆர்வமுடன் இரு. முன்னேற்றம் நிச்சயம் வரும்.
* இக்கட்டான சூழ்நிலையில் அமைதியுடன் இரு. தீர்வு கிடைக்கும்.
* பிறருடன் வாக்குவாதம், சண்டையில் ஈடுபடாதே.
* மனசாட்சிக்குக் கட்டுப்படு. அது சொல்வதைக் கேள்.
* எப்போதும் சந்தேகப்படாதே. மீறினால் நிம்மதி போகும்.
* உன் நியாயமான எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும்.