திருப்பதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை எந்த நாட்களில் விஐபி தரிசனம் கிடையாது? தேதி வெளியீடு
திருப்பதி; திருப்பதியில் ஜூலை முதல் செப்டம்பர் வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவது குறித்த விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது. பல்வேறு திருவிழாக்கள் மற்றும் விசேஷ நிகழ்வுகள் காரணமாக, ஸ்ரீவாரி கோயிலில் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவது குறித்த விவரங்கள் பின்வருமாறு:
பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும் தேதிகள்; அதற்கான காரணம்
ஜூலை 14: கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்.
ஜூலை 17: அனிவார ஆஸ்தானம்.
ஜூலை 19: ஸ்ரீ ஆண்டவன் ஆசிரம சுவாமிஜிக்கு சிறப்பு மரியாதை
ஜூலை 29: ஜீயர் சுவாமிகளின் சாதுர்மாஸ்ய சங்கல்பம்.
ஆகஸ்ட் 22: பவித்ரோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் (தொடக்க நிகழ்வு).
ஆகஸ்ட் 24: பவித்ரோற்சவத்தின் இரண்டாம் நாளில் பவித்ரங்கள் (புனித நூல்கள்) சமர்ப்பித்தல்.
செப்டம்பர் 8: ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்.
செப்டம்பர் 14: ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்ப்பணம்.
செப்டம்பர் 15 முதல் 23 வரை: ஸ்ரீவாரி பிரம்மோற்சவம்.
மேற்கூறிய தேதிகளில் விஐபி பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தங்கள் திருமலை யாத்திரையைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.