உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் திருவிழா; மாவிளக்கு ஊர்வலம்

கிருஷ்ணகிரி மாரியம்மன் கோவில் திருவிழா; மாவிளக்கு ஊர்வலம்

கிருஷ்ணகிரி; குரும்பட்டியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஏராளமான பெண்கள் மாவிளக்கை எடுத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், குரும்பட்டி கிராமத்தில், மழை வளம் பெருகவும், மத ஒற்றுமை நிலைத்திருக்கவும், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சியும், இரண்டாவது நாளான நேற்று மாலை, ஏராளமான பெண்கள் மா விளக்கை ஊர்வலமாக கொண்டு சென்று வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து, மாவிளக்கை அம்மனுக்கு படைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டிக் கொண்டனர். மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தனர். இதையடுத்து, நடந்த தீமிதி விழாவில், பூசாரிகள் கரகம் சுமந்து தீமிதித்தனர். இதைதொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் ஒற்றுமையுடன், அமைதியாக வாழவும் வேண்டி, இத்திருவிழா நடந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !