கங்காதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :3 hours ago
சின்னசேலம்: சின்னசேலம் கங்காதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை நடந்தது.
சின்னசேலத்தில் பிரசித்தி பெற்ற ருத்ராட்ச மாலைகளால் கர்ப்பகிரகம் அமைக்கப்பட்டுள்ள கங்காதீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி மூன்று கலசங்கள் வைத்து வேள்வி பூஜைகள் நடந்தது. 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து சுவாமிக்கு வெள்ளி கவசங்கள் அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. வழிபாட்டினை கோவில் அர்ச்சகர் கணேசன் செய்து வைத்தார். திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.