உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் தரிசனம்

கைலாசம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா; பக்தர்கள் தரிசனம்

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கைலாசம்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஜூலை 3ல் காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் அம்மன் கரகம் ஜோடிக்கப்பட்டு, மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், அலகு குத்துதல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். விழாவில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் பங்கேற்று, அம்மன் தரிசனம் பெற்றுச் சென்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !