பொன்னந்தி காளியம்மன், கருப்பண்ணசாமி கோவிலில் வருடாபிஷேக விழா
ADDED :1 hours ago
கடலாடி: கடலாடி அருகே ஏ. புனவாசல் ஊராட்சியில் உள்ள ஏந்தல் கிராமத்தில் கண்ணாயிர மூர்த்தி அய்யனார், பொன்னந்தி காளியம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இரண்டாம் ஆண்டு ராஜகோபுரம் வருடாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையில் புனித நீர் குடங்கள் புறப்பாடு நடந்து. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.