ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :10 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, பிரதோஷ நாயகரான நந்தி சுவாமிக்கு நேற்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கும் அபிேஷகம் நடந்தது.
5:00 மணிக்கு, நந்தி பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து, 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. பின், நந்தி பகவான் கோவில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், சாலை அகரத்தில் உள்ள ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.