கோதண்டராமருக்கு வெள்ளி கவசம்
ADDED :4665 days ago
மதுராந்தகம்: மதுராந்தகம், ஏரிகாத்த கோதண்டராமருக்கு, பத்தர் ஒருவர் வெள்ளி கவசத்தை காணிக்கையாக அளித்துள்ளார்.மதுராந்தகத்தில் ஏரிகாத்த கோதண்டராமர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் மதன்ராஜ். வியாபாரி. இவர், மூலவர் கோதண்டராமருக்கு, ஏழரை கிலோ வெள்ளியால் ஆன கவசத்தை நன்கொடையாக, கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, அர்ச்சகர் அன்னாதூர் சேஷத்திரி ஆகியோரிடம் வழங்கினார். இதையடுத்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்ட கோலத்தில், கோதண்டராமர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.