அனந்தசரஸ் திருக்குளத்தில் வரதராஜ பெருமாள் தெப்போற்சவம்
ADDED :4721 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் குளத்தில் தெப்போற்சவம் நேற்றுமுன் தினம் கோலாகலமாக துவங்கியது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, அனந்தசரஸ் திருக்குளத்தில், ஆண்டுதோறும் தை மாதம் தெப்போற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு தெப்போற்சவம், நேற்றுமுன்தினம் துவங்கியது.தெப்போற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில், வரதராஜப் பெருமாள் தாயாருடன், அலங்கரிக்கப்பட்டு தெப்போற்சவத்தில் எழுந்தருளி, அனந்தசரஸ் குளத்தில் வரதராஜப் பெருமாள் வலம் வந்தார். நேற்று இரண்டாம் நாள் தெப்போற்சவம் நடந்தது. இன்றுடன் தெப்போற்சவம் நிறைவடைகிறது. தெப்போற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.