உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவில் காட்டுவனஞ்சூரில் பூமி பூஜை

ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவில் காட்டுவனஞ்சூரில் பூமி பூஜை

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவில் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூரில் ராம பக்த மண்டலி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ராம ஆஞ்சநேயர் கோவில் அமைக்கப்படுகிறது. அதற்கான பூமி பூஜை நடந்தது.பரனூர் கிருஷ்ணபிரேமி ஆலோசனைப்படி திருக்கோவிலூர் உலகலந்த பெருமாள் கோவில் ஜீயர் ஆனந்தபட்டர், சீனுவாச ராமானுஜ ஆச்சார்யா, சங்கராபுரம் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பி.டி.ஓ., வெங்கடேசபாகவதர், நடராஜ அய்யர், ஆசிரியர் சீனுவாசய்யர், அன்பழகன், கணபதி, ஓய்வூதியர் சங்க தலைவர் கலியராமன் உட்பட பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !